Social Awareness
*சமூக நல்லொழுக்க விழிப்புணர்வு பயிற்சி*
படுக்கப் பத்து அரசு மேல்நிலைப்பள்ளியில் ஆய்குடி அமர் சேவா சங்கம் சார்பில் பள்ளி மாணவ மாணவிகளுக்கு சமூக நல்லொழுக்க விழிப்புணர்வு பயிற்சி நடைபெற்றது.
பள்ளித் தலைமை ஆசிரியர் திரு. பா.சேகர் தலைமை வகித்தார். இயற்பியல் ஆசிரியர் திரு. முத்துக்குமார் வரவேற்றார். அமர் சேவா சங்க பணியாளர்கள் விழிப்புணர்வு பயிற்சி அளித்தனர். பள்ளி மாணவ மாணவிகள், ஆசிரியர்கள், பிறைக்குடியிருப்பு சிவந்தி கல்வியியல் கல்லூரி பயிற்சி ஆசிரியர்கள் கலந்து கொண்டனர். சாரணர் இயக்க பொறுப்பு ஆசிரியர் திரு. டெரன்ஸ் நன்றி கூறினார். நிகழ்ச்சி ஏற்பாடுகளை ஆசிரியர்கள் திரு.முத்துசாமி திரு.தேவராஜன் ஆகியோர் சிறப்பாகச் செய்திருந்தனர்.
Comments
Post a Comment